search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட தடை"

    • ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர்.
    • இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    ரியாத்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.

    இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும் என ஷேவாக் சொல்கிறார். #MSDhoni #VirenderSehwag
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.




    டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான வி‌‌ஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

    இதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.
    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஓட்டலில் உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக 4 பேருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #AsianGame #Japanese
    டோக்கியோ:

    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    நார்வே பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்சனையில் இலங்கை வீரர் குணதிலகா 6 போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. #Gunathilaka
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை சஸ்பெண்டு செய்து அதோடு அவரது வருமானத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் ஆடுகிறார். இவர் தனது தந்தையை பார்க்க சமீபத்தில் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த நார்வே நாட்டு பெண்கள் 2 பேரை குணதிலகா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து செல்லக்கூடாது என்பது விதியாகும். இதன் காரணமாகவே குணதிலகா சஸ்பெண்டு செய்யப்பட்டார். நார்வே பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணதிலகாவின் நண்பரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் போலீசார் இன்னும் சுமத்தவில்லை.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. 

    இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது.

    இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. ஏற்கனவே விளையாடிய 2 டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நிகோலஸ் கிக்கர் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #matchfixing

    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர். 25 வயதாகும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. நிகோலஸ் இந்த விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. 



    இந்நிலையில், நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆறு ஆண்டுகள் விளையாட டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது. அதோடு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தடை பாதியாக குறைக்கப்படுவதாகவும் டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு பின்னர் அறிவித்தது. இதனால் அவர் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கலாம் என கூறப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #match
    ×